டிச.12 பொம்மலாட்டம்

புதன், 7 ஜனவரி 2009 (22:36 IST)
பெயருக்கேற்றபடி ‌ரிலீஸ் தேதி தெ‌‌ரியாமல் ஆடிக்கொண்டிருக்கிறது, பாரதிராஜாவின் பொம்மலாட்டம். ஆர்ஜுன், நானா படேகர், கல்யாணி, காஜல் அகர்வால் நடித்திருக்கும் இப்படம் இந்தி, தமிழில் ஒரே நேரத்தில் தயாராகியிருக்கிறது.

இதில் அறிமுகமான காஜலும், கல்யாணியும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகின்றனர். ஆனால் முதல் படம் மட்டும் இன்னும் வெளிவரும் வழியை காணோம்.

பல ‌ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு அந்த ‌ரிலீஸ் தேதிகளில் எல்லாம் வெளிவராத பொம்மலாட்டத்துக்கு இறுதி கெடுவாக டிசம்பர் 12 ஆம் தேதியை தீர்மானித்துள்ளனர். அன்று நிஷா புயலோ உஷா புயலோ எது அடித்தாலும் கண்டிப்பாக படம் வெள்ளித்திரை காணுமாம்.

அடித்து சொல்கிறார்கள். நாமும் மறுக்காமல் நம்புவோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்