குணாநிதியின் சூர்யா ப்ரொடக்சன் ரஜினியின் முரட்டுக்காளை படத்தை ரீ-மேக் செய்கிறது. ரஜினி நடித்த வேடத்தில் சுந்தர் சி-யும் ரதி வேடத்தில் சினேகாவும், ஜெய்சங்கர் வேடத்தில் சுமனும் நடிக்கின்றனர். படத்தை செல்வபாரதி இயக்குகிறார்.
டிசம்பரில் முதல் காட்சியை செங்கோட்டையில் எடுக்கயிருக்கின்றனர். படத்தில் ரயில் வரும் காட்சிகள் பிரதானமாக இடம்பெறுகிறது. இந்தக் காட்சியை மட்டும் பழமை மாறாமல் எடுக்கயிருக்கிறார்கள்.
தமிழகத்தில் எல்லா இடங்களிலும் பிராட்கேஜ் வந்துவிட்ட நிலையில் செங்கோட்டையில் மட்டும் இன்னும் மீட்டர்கேஜ் மாற்றப்படாமல் உள்ளது.
ஆகவேதான் முதல்காட்சியை செங்கோட்டையில் எடுக்க தீர்மானித்துள்ளனர்.