28‌‌ல் மூன்று படங்கள்!

புதன், 7 ஜனவரி 2009 (22:13 IST)
இந்த வருடம் இதுவரை வெளியான படங்களில் 7 படங்கள் மட்டுமே அனைத்து தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து கொடுத்துள்ளன. தெனாவட்டு இந்த லிஸ்டில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயின் குருவி, அ‌ஜித்தின் ஏகன், ர‌ஜினியின் குசேலன் என மெகா நடிகர்களின் படங்கள் ச‌ரியாக போகாதது தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்பு. இந்நிலையில் வரும் 28 ஆம் தேதி வெளியாகும் மூன்று படங்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறார்கள் விநியோகஸ்தர்கள்.

மோசர் பேர் தயா‌ரிப்பில் சசி இயக்கியிருக்கும் பூ 28 அன்று வெளியாகிறது. அதேபோல் ஷா‌ஜி கைலாஸ் இயக்கத்தில் ஆர்கே நாயகனாக நடித்திருக்கும் எல்லாம் அவன் செயல் 28 வெளியாகிறது. அதே நாள் வெளியாக இருக்கும் இன்னொரு படம் மகேஷ் சரண்யா மற்றும் பலர்.

இந்த மூன்று படங்களில் இரண்டாவது வெற்றிபெறும் என்பது திரையுலகின‌ரின் நம்பிக்கை.

வெப்துனியாவைப் படிக்கவும்