பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் அறிமுகமான ஆன்ட்ரியா அடிப்படையில் ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். சினிமாவின் போலி சென்ட்டிமென்டில் எல்லாம் அகப்படாதவர். எனக்குப் பிடித்தது ஒயிட் ஒயின் என ஓபனாக பேசும் அளவுக்கு வெளிப்படையானவர்.
இவரது பேச்சு மட்டுமின்றி குரலும் ரொம்ப ஸ்வீட். நன்றாக பாடக் கூடியவர். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இவரை பாட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர், ஜி.வி.பிரகாஷ்.
நடிப்பு இல்லையென்றாலும் பாடி பிழைத்துக் கொள்வார் ஆன்ட்ரியா.