ராணுவ ரகசியத்தைக் காட்டிலும் தன் படப்பிடிப்பை ரகசியமாகவே வைத்திருப்பார் இயக்குனர் ஷங்கர். 150 கோடியில் உருவாகிவரும் 'எந்திரன்' படப்பிடிப்பும் அப்படித்தான்.
இப்படி பொத்தி வைத்து எடுத்தாலும் எப்படியோ பாடல், ஸ்டில் வெளியாகிவிடுவதால்... அடையாள அட்டை உள்ள டெக்னிஷியன்கள் மட்டும்தான் படப்பிடிப்பு தளத்தில் இருக்க அனுமதி.
ஆனாலும், எந்திரனின் ரஜினி கெட்டப் ஸ்டில்ஸ் சில இன்டர்நெட்டில் வெளியாக, கடுப்பாகிப் போனார் ஷங்கர். அதனால் வெளிநாட்டின் போது அங்கு ரஜினியை சந்திக்க வரும் ரசிகர்கள் யாரும் செல்ஃபோன் கொண்டு செல்லக்கூடாது என்று கண்டிஷன் போட்டுள்ளார்.
இந்த செல்ஃபோன் கட்டுப்பாடு உதவி இயக்குனர்களுக்கும்தான் என்பதால் அவசர ஆத்திரத்திற்கு பேசமுடியவில்லை என்று வருத்தப்பட்டாலும், வெளியே சொல்ல முடியாத நிலையில் தவிக்கின்றனர் அவரது உதவி இயக்குனர்கள்.
ரொம்ப ரகசியம் காத்தாலும்... அந்த கோபத்திலேயே சிலர் கைவரிசை காட்டி... மறைமுகமாக ஸ்டில்ஸ் எடுத்து நெட்டில் அனுப்புவதும் உண்டாம்.