ஆமாம். ஐம்பதாவது படத்தின் இயக்குனர் யார் என்பதுதான் இன்றைய தேதியில் மில்லியன் டாலர் கேள்வி.
தற்போது ஓடிக் கொண்டிருக்கும் ஏகன் அஜித்தின் 48வது படம். 49வது படத்தை கௌதம் வாசுதேவ மேனன் இயக்குகிறார்.
விஜய்க்கு வில்லு 48வது படம். 49வது படத்தை பாபி சிவன் என்பவர் இயக்குகிறார். இவரின் ஐம்பதாவது படத்தின் இயக்குனர் யார் என்பதும் பெரிய கேள்விக்குறி. இளம் போட்டியாளர்களான விஜய், அஜித் இருவருக்கும் ஐம்பதாவது படம் மிக முக்கியமானது.
இந்நிலையில் அஜித்தின் ஐம்பதாவது படத்தை வெங்கட்பிரபு இயக்குவார் என்கிறார்கள் அஜித்துக்கு நெருக்கமானவர்கள்.
சென்னை 600 028 படத்தை பார்த்த போதே நாம் சேர்ந்து படம் பண்ணுவோம் என்று வெங்கட்பிரபுவிடம் கூறியிருந்தார் அஜித். சரோஜா பார்த்தபோது இந்த கோரிக்கையை மீண்டும் புதுப்பித்துக் கொண்டார்.
சரியான தயாரிப்பாளர் அமையாததால் இருவரும் இணையும் படம் தள்ளிப்போனது. தற்போது தனது புதிய படம் கோவாவில் பிஸியாக உள்ளார் வெங்கட்பிரபு. இது முடிந்ததும் அஜித் நடிக்கும் படத்தை இயக்குகிறார், அது தல நடிக்கும் ஐம்பதாவது படமாக இருக்கும் என கூறப்படுகிறது.