ஈரம், ஆனந்தபுரத்து வீடு, ரெட்டைச்சுழி என ஒரே நேரத்தில் 3 படங்களை தயாரித்து வருகிறது ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம். இந்த படங்கள் தயாராகி வரும் போதே கதை கேட்கும் படலமும் நடந்து வருகிறது.
ஒளிப்பதிவாளர் டி.கண்ணனின் சகோதரர் சுரேஷ் சொன்ன கதை ஷங்கருக்கு பிடித்துள்ளது. எஸ் பிக்சர்ஸ் அந்த கதையை படமாக்கும் என சுரேஷுக்கு அவர் உறுதியளித்துள்ளார்.
3 படங்களும் முடிவடைந்த பிறகு சுரேஷ் இயக்கும் படம் டேக் ஆஃப் ஆகும் என்று தெரிகிறது.