தயாரிப்பாளர்கள் இயக்குனர்களாவது கோலிவுட்டில் ஒன்றும் புதிதல்ல. ஒரு படம் டைரக்ட் செய்தவர்கள் தயாரிப்பாளர்களான காலம் போய், முதல் படத்தையே சொந்தமாக தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள் நம்மவர்கள். உதாரணம் சுப்ரமணியபுரம் சசிகுமார்.
கள்வனின் காதலி, மச்சக்காரன் படங்களை இயக்கிய தமிழ்வாணனும் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார். இரண்டு சுமாரான படங்களுக்குப் பிறகு கல்லூரி படத்தின் ஹீரோ அகிலை வைத்து புதிய படத்தை விரைவில் தொடங்க உள்ளார் தமிழ்வாணன்.
படத்தை அவரே தயாரிக்கிறார். இதற்காக ஏ குட் ஒன் பிலிம்ஸ் எனும் பட நிறுவனத்தை தொடங்கியுள்ளார். விரைவில் படத்தை தொடங்க உள்ளார் தமிழ்வாணன்.