ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இரண்டு படங்களில் தற்போது நடித்து வருகிறார் நந்தா. ஈரம், அனந்தபுரத்து வீடு என்ற அந்த இரண்டு படங்களுக்குப் பிறகு நந்தா நடிக்கயிருக்கும் படத்தை அஸ்லாம் இயக்குகிறார்.
சேரனிடம் பல படங்களுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அஸ்லாம். இவர் கூறிய கதை பிடித்து நந்தா இந்த படத்தில் நடிக்கிறார். அழகிய அசுரா படத்தை தயாரித்த ஜெய்ராம் கிரியேஷன்ஸ் அஸ்லாம் இயக்கும் படத்தை தயாரிக்கிறது.