கிருஷ்ணலீலை, திருவண்ணாமலை படங்களை தயாரித்துவரும் பாலசந்தரின் கவிதாலயா அடுத்து நூற்றுக்கு நூறு திரைப்படத்தை தயாரிக்கிறது.
பாலசந்தரின் நான் அவன் இல்லை படத்தை ரீ-மேக் செய்த செல்வா இந்தப் படத்தை இயக்குகிறார். இதுவும் பாலசந்தர் ஜெய்சங்கரை வைத்து இயக்கிய பழைய நூற்றுக்கு நூறு படத்தின் ரீ-மேக் என்பது குறிப்பிடத்தக்கது.
வினய் இதில் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஐந்து ஜோடிகள். சுந்தியா, சினேகா, கஸ்தூரி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். லட்சுமி ராய், பானு ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சலீம் கௌஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இதில் நடிக்கிறார்.