இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் நேற்று இரவு திடீரென கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது பிரிவினையை தூண்டும் வகையில் பேசுதல், இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவித்தல் மற்றும் சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடக்த ராமேஸ்வரம் பொதுக் கூட்டத்தில் இயக்குனர்கள் சீமானும், அமீரும் இலங்கையின் உண்மை நிலையை எடுத்துக் கூறி ஆவேசமாக பேசினர்.
இதற்கு அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த எதிர்ப்பையடுத்து தமிழக அரசு நேற்று இரவு சீமானையும், அமீரையும் கைது செய்தது.
தமிழர் நலனுக்காக குரல் கொடுத்த இரு கலைஞர்களை காவல்துறை கைது செய்திருப்பது தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.