நியூட்டனின் 3-ம் விதி படத்தில் எஸ்.ஜே. சூர்யா ஜோடியாக நடித்து வருகிறார் ஷியாலி. இது அவருக்கு முதல் படம். படம் நன்றாக வந்திருக்கும் மகிழ்ச்சியில் இருப்பவருக்கு ஒரேயொரு வருத்தம்.
இவரை சந்திக்கும் அனைவரும் தவறாமல் கேட்கும் கேள்வி, கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்குடனான காதல் எப்படி போய்க் கொண்டிருக்கிறது?
உண்மையில் எனக்கும் சோயிப்புக்கும் நட்பை தாண்டி எந்த உறவும் இல்லை. இருவரும் ஒரு படத்தில் சேர்ந்து நடிப்பது உண்மைதான், இதை வைத்து காதல் என்று கதை கட்டுவதா என்று சீறுகிறார் ஷியாலி.
கிசு கிசு, கோபம் எல்லாவற்றையும் தாண்டி இருவரின் நட்பும் நன்றாகவே போய் கொண்டிருக்கிறது.