திரையிசைப் பாடல்கள் இலக்கியமா, இல்லை வெறும் காசுக்காக எழுதப்படுபவையா? இந்த கேள்வி பாடல்கள் எழுதப்பட்ட காலம் தொடங்கி இருந்து வருகிறது.
வெண்ணிலா கபடி குழு படத்தில் பாடல்கள் எழுதியிருக்கும் பிரான்சிஸ் கிருபா ஓர் இலக்கியவாதி. கவிதைகள் எழுதுகிறவர். வெண்ணிலா அவரது முதல் திரை முயற்சி.
பிரபல வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், சினிமாவுக்கு பாடல் எழுதுவது இலக்கியமாகாது என்று கூறியிருந்தார். அதற்கு பதில் அளிப்பது போல் நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசினார் வைரமுத்து.
பிலிம் நியூஸ் ஆனந்தன் தொகுத்த திரைப்பாடலாசிரியர்களின் பாடல்கள் அடங்கிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து, சினிமா பாடல்களும் இலக்கியமே என்றார். பாடலாசிரியர்கள் கூலிக்காரர்கள் அல்ல அவர்கள் படைப்பாளிகள் என்றார் தனக்கேயுரிய கம்பீரத்துடன்.