தாணு தயாரிக்க அவரது மகன் கலாபிரபு இயக்கியிருக்கும் சக்கரகட்டிக்கு வெளிநாட்டில் நல்ல வரவேற்பு.
பொதுவாக மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குனர்களின் படங்களுக்கும், கமல், ரஜினி மாதிரியான நடிகர்களின் படங்களுக்குமே வெளிநாடுகளில் வரவேற்பு இருக்கும். முழுக்க புதுமுகங்களால் உருவான ஒரு படத்துக்கு வரவேற்பு கிடைத்திருப்பது இதுவே முதல்முறை.
முதலில் வெளிநாடுகளுக்கு முப்பத்தியிரண்டு பிரிண்டுகள் அனுப்பியுள்ளனர். பிறகு அது போதாமல் மேலும் சில பிரிண்டுகள் அனுப்பியுள்ளனர்.
புது முகங்களின் படம் ஒன்றிற்கு இத்தனை பிரிண்டுகள் போடுவது இதுவே முதல் முறை என்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் தாணு.
சக்கரகட்டியின் இந்த சாதனைக்கு படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானும் ஒரு காரணம் என்பதை சொல்லத் தேவையில்லை.