நிர்வாண சுந்தர் சி!

வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (15:46 IST)
தீ படத்தில் சுந்தர் சி-க்கு இரண்டு ஜோடிகள். நமிதா, ராகினி. இரண்டு பேருடனும் டூயட் பாடுகிறார் அதிர்ஷ்டக்கார சுந்தர் சி.

தெலுங்கில் மிகப் பெ‌‌ரிய வெற்றியை பெற்ற ஆ‌க்சன் து‌ரியோதனா படத்தையே தீ என்ற பெய‌ரில் எடுத்து வருகின்றனர். இயக்கம் ‌ஜி. கிச்சா.

நேர்மையான போலீஸ் அதிகா‌ரியான சுந்தர் சி-யை அரசியல்வாதிகள் பந்தாடுவதும், அவர்களை சமாளிக்க ஒரு கட்டத்தில் சுந்தர் சி-யும் கதர் அணிந்து அரசியலில் குதிப்பது கதை.

படத்தை பற்றிய சுவாரஸியமான தகவல்களில் ஒன்று, ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளாராம் சுந்தர் சி.

சபாஷ், நமிதா, ராகினிக்கு ச‌ரியான போட்டி. எந்த காட்சிக்கு இந்த விப‌ரீத முயற்சி என்பதற்கு விடையில்லை. சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்களாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்