ஜெய் நடிக்கும் குடும்பப் படம்!

புதன், 24 செப்டம்பர் 2008 (20:14 IST)
குடும்பப் படத்தில் ஜெய்யா? ஆச்சரியமாக இருக்கிறதா. ஆனால் நூறு சதவீதம் உண்மை.

சூரியன் சட்டக் கல்லூரி படத்தை தயாரிக்கும் சிவசக்தி பாண்டியன், அதனைத் தொடர்ந்து தயாரிக்கும் படம், அர்ஜுனன் காதலி. சுப்ரமணியபுரம் ஜெய் ஹீரோ.

படத்துக்கு இசை தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா. படத்தை இயக்குகிறவர் தேவாவின் மருமகன் பார்த்தி பாஸ்கர். ஹீரோவாக நடிக்கும் ஜெய், தேவாவின் தம்பி சம்பத்தின் மகன். உண்மையான குடும்பப் படம்.

பார்த்தி பாஸ்கர் முருக பக்தர். பம்பரக் கண்ணாலே படத்தின் ஹீரோ ஸ்ரீகாந்தை முருக பக்தராக காட்டியிருந்தார். ஓம் முருகா எனத் தொடங்கும் பாடலும் அதில் இடம்பெற்றிருந்தது.

அர்ஜுனன் காதலியிலும் ஒரு முருகன் பாடல் இடம்பெறுகிறது. வாலி எழுதியிருக்கிறார். ஜெய் தவிர, படத்தில் நடிக்கும் அனைவரும் புதுமுகங்கள் என்பது இன்னொரு ஆச்சரியமான தகவல்.

வெப்துனியாவைப் படிக்கவும்