சிவாஜி பிலிம்ஸின் மறுப்பு

தெய்வ மகன் படத்தின் புதிய பெயர் ஆதி நாராயணன். தெய்வ மகன் பெயரை பயன்படுத்த சிவாஜி பிலிம்ஸ் அனுமதி மறுத்ததால் பெயரை ஆதி நாராயணன் என்று மாற்றியுள்ளார் தயாரிப்பாளர் எஸ். பாலாஜி.

பழைய படங்களின் பெயர்களை பயன்படுத்தவது என்றால் சம்பந்தப்பட்ட பட நிறுவனத்திடம் அனுமதி பெற வேண்டும்ட என்பது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய விதி. ஆனால் தெய்வ மகன் பெயரை அப்படத்தைத் தயாரித்த சிவாஜி பிலிம்ஸின் அனுமதி பெறாமல் தனது படத்துக்கு வைத்துக் கொண்டார் பாக்ஸ் ஆபிஸ் பட நிறுவனர் எஸ். பாலாஜி.

சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் நடித்த மறக்க முடியாத காவியம் தெய்வமகன், அப்படத்தின் பெயரை பயன்படுத்துவது சரியல்ல என்று படத் தொடக்க விழாவுக்கு முன்பே பேட்டியொன்றில் கண்டித்திருந்தார் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம. நாராயணன். அதை காதில் வாங்காமல் படத்தின் தொடக்க விழாவை நடத்தினார் பாலாஜி. ஒட்டு மொத்த திரையுலகமும் இந்த விழாவை புறக்கணித்தது. மேலும், சிவாஜி பிலிம்சும் தெய்வமகன் பெயரை வைக்க அனுமதி மறுத்ததால் தெய்வத்தின் பெயராக ஆதிநாராயணனை படத்தின் புதிய பெயராக்கியிருக்கிறார்கள்.

புதுமுகம் கஜன் நடிக்கும் இப்படத்தில் அவரது ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்