எந்திரனின் இரண்டாவது பாடல்!

செப். 8 மச்சுபிச்சுவில் எந்திரன் படப்பிடிப்பை தொடங்கிய ஷங்கர், அடுத்த மாதத்திற்குள் மூன்று பாடலை முடிக்க திட்டமிட்டுள்ளார். முதல் பாடல் உலக அதிசயமான மச்சபிச்சுவிலும், அமேசான் அடர்ந்த காடுகளிலும் தயாராகிறது.

இரண்டாவது பாடலை அழகிய ஹவாய் தீவில் படமாக்க திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர். ரஜினி ஐஸ்வர்யா ராய் இடம்பெறும் டூயட் பாடலாம் இது.

ரஜினியின் அறிமுகப் பாட‌‌ல் முழுக்க கிரஃபிக்ஸில் தயாராக உள்ளது. ஹாலிவுட் ஸ்டுடியோவில் இப்பாடல் படமாக உள்ளது.

இதுவரை மூன்று பாடல்களின் டியூன்க்ள அளித்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.

வெப்துனியாவைப் படிக்கவும்