கற்றது தமிழ், ராமேஸ்வரம் என இரு பரிசோதனை முயற்சிகளுக்குப் பிறகு நடிகர் ஜீவா எடுத்த முடிவு, ஆக்சன் கதைக்கு முக்கியத்துவம் தருவது.
அவரது முடிவுப்படியே அனைத்து கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்த ஆக்சன் படமாக உருவாகியிருக்கிறது, தெனாவட்டு. அடுத்தப் படம் சிவா மனசுல சக்தி ஆக்சன் குறைவான காதல் படம்.
இவ்விரு படங்களுக்குப் பிறகு, அப்பா ஆர்.பி. செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கிறார் ஜீவா. இதற்காக பல மாதங்கள் கதை கேட்டு வந்தனர்.
கடைசியாக ராஜ்குமார் என்ற அறிமுக இயக்குனர் சொன்ன கதை பிடித்துப்போக, அவரையே, சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்துக்கு இயக்குனராக்கியிருகிறார்கள். படத்துக்கு குடுமி என்று பெயர் வைத்துள்ளார் ராஜ்குமார்.