பழைய படங்களின் பெயர்களை புதிய படங்களுக்குப் பயன்படுத்துவது சாதாரணமாகி வருகிறது. தியோடர் பாஸ்கரன் போன்ற திரைப்பட ஆய்வாளர்கள் இதுகுறித்து கவலை தெரிவித்தும் கட்டுக்குள் வருவதாயில்லை இந்த போக்கு.
ஆயிரத்தில் ஒருவன், பொல்லாதவன், படிக்காதவன், நாயகன், நம் நாடு, நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், தசாவதாரம், மர்மயோகி என்ற நீண்ட வரிசையில் புதிதாக நூறாவது நாள். 1984ல் வெளியான இந்த க்ரைம் த்ரில்லர் சத்யராஜின் திரை வாழ்க்கையில் ஒரு மைல் கல்.
இதே பெயரில் புதுமுகம் ஜெரா, சுஜிபாலா நடிக்க தயாராகிறது ஒரு படம். கண்ணா என்பவர் இயக்கம். திரைத் துறையில் நூறாவது நாள் என்பது வெற்றியின் அடையாளம். ஒவ்வொரு கலைஞனுக்கும் முக்கியமானது.
சினிமா கலைஞனின் வாழ்வை, போராட்டத்தை சொல்லும் படம் என்பதால் நூறாவது நாள் பெயரை தேர்ந்தெடுத்ததாக கூறுகிறார் கண்ணா.
நாசர், ராஜ்கபூர் ஆகியோரும் புதிய நூறாவது நாளில் நடிக்கிறார்கள்.