படம் 'ஹிட்'டாகும் பார்முலா!

புதன், 17 செப்டம்பர் 2008 (19:30 IST)
சென்டிமெண்டால் ஆனதுதான் சினிமா. கதை கேட்பது முதல் நடிகர்களுக்கு அட்வான்ஸ் கொடுப்பது, ூட்டிங் கிளம்புவது, படம் ரிலீஸ் செய்வது என்று ஏகப்பட்ட சென்டிமெண்ட்.

இளையராஜா தான் இசையமைக்கும் படங்களில் ஒரு பாடலையாவது வாலிக்கு கொடுத்துக் கொண்டிருந்தார். அதேபோல், எஸ்.பி.பி.க்கு ஒரு பாடலை கொடுத்து பாடச் சொல்வார். அதேபோல தற்போது இயக்குனர் ஷங்கரும் தான் இயக்கும் படங்களில் எஸ்.பி.பி.யை பாட வைப்பார்.

தற்போது அப்படி சென்டிமெண்ட் பார்ப்பது இன்னும் அதிகமாகிவிட்டது என்றே சொல்லலாம். தற்போது டி.பி. கஜேந்திரன் இயக்கும் படம் 'மகனே என் மருமகனே'. அவர் இயக்கும் படங்களில் காமெடி காட்சிகளில் அவர் நடித்தால் அந்தப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை.

அப்படி நடித்த பல படட்ஙகள் வெற்றியும் பெற்றிருப்பதால் இந்தப் படத்திலும் சில காட்சிகளில் காமெடி பண்ணியிருக்கிறார்.

எது எப்படியோ எதை தின்றால் பித்தம் தெளியும்? என்பதைப் போல ஏதாவது காரணம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். கதை நன்றாக இருந்து திரைக்கதையும் அமைந்துவிட்டால் எந்தவித சென்டிமெண்டும் தேவையே இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்