புதுமுகங்கள் போதும்!

புதன், 17 செப்டம்பர் 2008 (19:26 IST)
ஒளிப்பதிவாளர்களாகட்டும், நடன இயக்குனர்களாகட்டும், ஸ்டண்ட் மாஸ்டர்களாகட்டும், நடிகர்களாகட்டும் யாருக்கும் ஒரு படத்தையாவது இயக்க வேண்டும் என்பதில் தனியாத ஆசை இருந்துகொண்டுதான் இருக்கிறது.

அதிலும் ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்கள் ஆவது அதிகம் என்று சொல்லலாம். பாலுமகேந்திரா தொடங்கி, தங்கர்பச்சான், விஜய் மில்டன், கே.வி. ஆனந்த் என பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும்.

அந்தப் பட்டியலின் வரிசையில் இன்னொரு ஒளிப்பதிவாளரும் சேர்ந்திருக்கிறார். அவர் ஷிவா. 'மாநகர காவல்', 'லண்டன்', 'ஆணை' 'என்றென்றும் காதல்' என இருபத்தைந்து படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

அவர் தற்போது தனது அண்ணன் கே.எஸ். சீனிவாசனுடன் இணைந்து படம் தயாரிப்பதோடு, இயக்கவும் இருக்கிறார். ஒரு சூப்பர் ஸ்கிரிப்ட், அதை வித்தியாசமான கோணத்தில் பிரமாண்டமாக எடுக்கவுள்ளேன். கதை நன்றாக இருப்பதால் புதுமுகங்களை வைத்து எடுத்தாலும் நன்றாக போகும் என நம்பிக்கொண்டிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் படம் இயக்கினால் சரியாக ஓடாது என்ற சென்டிமெண்டையும் உடைக்க போவதாகவும் கூறுகிறார் ஷிவா. ஓடவையுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்