நடனமாட பயந்த நயன்தாரா!

செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (18:06 IST)
நடனப்புயல் பிரபுதேவா இயக்க, இளைய தளபதி விஜய் நடிக்கும் படம் 'வில்லு'. பக்கா கமர்ஷியல் படமான இதில் வடிவேலு சூப்பர் காமெடி செய்திருக்கிறார்.

ஏற்கனவே இதே கூட்டணியில் வெளியான 'போக்கிரி' செமஹிட். அதேபோல வில்லு படத்தையும் வெற்றிப் படமாக்க உழைத்துக் கொண்டிருக்கிறார் பிரபுதேவா.

போக்கிரியில் அஸினை தன்னோடு இணைத்து 'சுட்டும் விழி சுடரே' என்ற பாடலுக்கு ஆடி வயிறு குலுங்க சிரிக்க வைத்தது போல, இந்தப் படத்தில் நயன்தாராவை நினைத்துக் கொண்டு 'மை நேம் ஈஸ் பில்லா' என்ற பாடலுக்கு ஆடியிருக்கிறார்.

இதற்காக ஏவி.எம்.-ல் பிரமாண்டமான செட் போட்டு இப்பாடலை எடுத்திருக்கிறார்கள். முதலில் வடிவேலுடன் ஆடுவதா! என்று தயங்கியிருக்கிறார் நயன். காரணம் வடிவேலு நடித்த 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' படத்தில் அவருடன் ஆட்டம் போட்ட ஸ்ரேயா மார்க்கெட் ஆட்டம் கண்டதுபோல் தனக்கும் ஏற்படுமோ என்றுதான்.

பிரபுதேவா சும்மா காமெடிக்காக சும்மா பிட் ஸாங் என்று சொன்னதும்தான் ஒப்புக் கொண்டிருக்கிறார். படம் பாதிக்குமேல் முடிந்துவிட்ட நிலையில், வரும் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். அப்படி வெளியானால் விஜய் ரசிகர்களுக்கு இரண்டு தீபாவளியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்