இயக்கம் அல்லது இசை!

செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (17:09 IST)
இனி சினிமாவே வேண்டாம் என்று சொந்த ஊருக்கு சென்ற இயக்குனர், மீண்டும் ஒரு படத்தை இயக்க சென்னைக்கு வந்திருக்கிறார் அவர் பெயர் டி.எம். ஜெயமுருகன்.

'ரோஜா மலரே' என்ற படத்தை இயக்கினார். படம் சரியாக ஓடாததால், அடுத்த படம் கிடைக்காமல் தவிக்க, சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு சொந்த ஊருக்கே சென்றவரை திரும்ப அழைத்து வந்து 'அடடா என்ன அழகு' என்ற படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் அப்பட தயாரிப்பாளர் திருப்பூர் ராமசாமி.

ஆனாலும், படம் தொடங்கப்பட்டு வெகு நாட்கள் ஆகியும் இந்தப் படமும் இன்னும் வெளிவராததால் மிகுந்த கலக்கத்தில் இருக்கிறார் இயக்குனர். இந்தப் படம் வெளியானால் தனக்கென ஒரு நிரந்தரமான இடம் கிடைக்கும் என்று பெரிதும் நம்பிக்கொண்டு இருக்கிறார்.

அதுவும் பாடல்களுக்கு இவரே இசையமைத்தும் இருப்பதால்... தொடர்ந்து இசையமைக்கும் வாய்ப்பு வந்தாலும் வரலாம் என்றும் நண்பர்களிடம் சொல்லி வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்