கன்னா பின்னாவென்ற வளர்ச்சிக்கு நடிகை ஒருத்தரை உதாரணம் காட்ட வேண்டும் என்றால் பாவனாவைத்தான் காட்ட வேண்டும்.
ஏதோ போன மாதம்தான் 'சித்திரம் பேசுதடி' படம் மூலம் அறிமுகம் ஆனதுபோல் இருக்கிறது. ஆனால் நிறையப் படங்களில் நடித்துவிட்டார். அவர் சமீபத்தில் நடித்த 'ஜெயம் கொண்டான்' படமும் நன்றாக ஓடுவதால் இன்னும் பிஸியாகிவிட்டார்.
தமிழில் மூன்று படங்கள் வைத்திருப்பதோடு தெலுங்கு படமான 'ஹீரோ' என்ற படத்திலும் மலையாளத்தில் ப்ருத்விராஜுடன் 'லாலிபாப்' என்ற படத்திலும், அதே மொழியில் மோகன் லாலுடன் ஒரு படத்திலும் நடிக்கிறார்.
அதனால் தமிழ் படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய கால்ஷீட் கேட்டுப் போனால் 'ரெண்டு வருஷம் கழிச்சு வரும் சேட்டா' என்று அனுப்பி விடுகிறார்.
அதிலும் தெலுங்கில் நடிப்பதென்றால் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். காரணம் தமிழ், மலையாளம் காட்டிலும் அங்கே சம்பளம் அதிகமாம்.
இருந்தாலும் பிறந்த நாட்டையும், வளர்ந்த நாட்டையும் ஒதுக்குவது முறையே இல்லை என்று புலம்பகிறார்கள் சில சினிமாக்காரர்கள்.