மீண்டும் ரவிச்சந்திரன்!

வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (17:57 IST)
கண்ணெதிரே தோன்றினாள் ரவிச்சந்திரன் மீண்டும் படம் இயக்குகிறார்.

எழுத்தாளர் சுஜாதாவை இம்ப்ரஸ் செய்யாத கதை கண்ணெதிரே தோன்றினாள். அரை மனதுடன்தான் அப்படத்திற்கு வசனம் எழுத ஒத்துக்கொண்டார். படம் அவர் எதிர்பார்க்காத வெற்றியைப் பெற்றது. தனது இறுதி காலம் வரை இந்த ஆச்சரியத்தை சொல்லிக் கொண்டிருந்தார் சுஜாதா.

பிரபல எழுத்தாளரையே தவறாக கணிக்க வைத்த ரவிச்சந்திரன் அடுத்து எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் பாதாளத்தை நோக்கிச் சென்றது. இறுதியாக இயக்கிய உற்சாகமும் அவரது பாதாள பயணத்தை நிறுத்தவில்லை.

இந்நிலையில், மீண்டும் படம் இயக்குகிறார் ரவிச்சந்திரன். ரிலையன்ஸின் அட்லாப்ஸ் படத்தை தயாரிக்கிறது. நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

இந்தப் படமாவது அவரது இறங்குமுக பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்