நிதி‌ஷ‌ின் யார் நீ!

வியாழன், 11 செப்டம்பர் 2008 (19:50 IST)
அ.தி.மு.க. பிரமுகர் கே.ஏ. கிருஷ்ணசாமியின் தங்கை மகன் தென்றல் குமார். தென்றல் வெள்ளித் திரையில் புயலாக நுழைந்திருக்கிறது.

ரியல் எஸ்டேட், பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் என கல்லா கட்டிக் கொண்டிருந்த தென்றல் குமாருக்கு கலை தாகம். பிஸனஸை கொஞ்சம் ஒதுக்கி வைத்து நிதிஸ் என்ற பெயருடன் கலையுலகில் குதித்துள்ளார். யார் நீ படத்தில் இவர்தான் ஹீரோ.

ஐம்பது படம் நடித்தபின் வரும் பிஸினஸ் மூளை முதல் படத்திலேயே இவருக்கு வாய்த்திருப்பது வரப்பிரசாதம். போரூரில் ஸ்டுடியோ கட்டி வாடகைக்கு விட்டுள்ளார் நிதிஷ‌்.

கலைக்கு கலை... வருமானத்துக்கு வருமானம். அரசியல்வாதியின் உறவினராயிற்றே!

வெப்துனியாவைப் படிக்கவும்