வெங்கடேஷின் மலை ராசி!

புதன், 10 செப்டம்பர் 2008 (20:01 IST)
அருண் விஜய், பூஜா நடிக்கும் படத்திற்கு இயக்குனர் ஏ. வெங்கடேஷ் வைத்திருக்கும் பெயர், மலை மலை. அது என்ன ரெட்டை மலை?

முடியை பிய்த்துக் கொண்டவர்களுக்கு விளக்கம் கிடைத்துள்ளது. ஏ. வெங்கடேஷ் இயக்கிய சாக்லெட் படம் சுமார் என்றாலும் பட்டிதொட்டியெல்லாம் எதிரொலித்தது, அதில் இடம்பெற்ற மும்தாஜின் மலை மலை மருதமலை பாடல்.

அதற்குப் பிறகு எத்தனையோ படங்களை எடுத்துவிட்டார் வெங்கடேஷ். அதில் எத்தனையோ பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், மலை அளவுக்கு ஹிட்டானது ஏதுவுமில்லை.

ராசியான பாடல் என்று வெங்கடேஷ் கருதுவதால் அதையே தலைப்பாக்கியிருக்கிறார்.

சினிமாவில் செண்டிமெண்டுக்கு ஒரு அளவே இல்லப்பா!

வெப்துனியாவைப் படிக்கவும்