ஒரு படம் நான்கு இசையமைப்பாளர்கள்!

செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (17:56 IST)
மாதவன், சதா, ஷமிதா நடிக்கும் லீலை படத்தின் பெயரை நான் அவள் அது என்று மாற்றியிருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் பாடல்களை நான்கு இசையமைப்பாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷ் இரண்டு பாடல்களுக்கும், பிரசன்னா சேகர் படத்தின் தீம் பாடலுக்கும், டைட்டில் பாடலை தெலுங்கின் முன்னணி இசையமைப்பாளர் ஆர்.பி. பட்நாயக்கும், வளர்ந்துவரும் இளம் இசையமைப்பாளர் தரண் ஒரு பாடலுக்கும் இசையமைத்துள்ளனர்.

இசையில் வெரைட்டி இருப்பதுபோல் கதையும் மிரட்டலாக இருக்குமாம். வர்மாவின் தயாரிப்பு... மிரட்டல் இருக்கத்தானே செய்யும்.

வெப்துனியாவைப் படிக்கவும்