முதலிடத்தில் சரோஜா!

சென்ற வாரம் நான்கு படங்கள் ரிலீஸ். சரோஜா, அலிபாபா, தனம் மற்றும் கி.மு.

எதிர்பார்த்தபடி அனைவரின் மனதைக் கவர்ந்து பாக்ஸ் ஃபில் முதலிடம் பிடித்துள்ளது சரோஜா. தமிழகம் முழுவதும் எண்பது சதவீத வசூலை முதல் வாரத்தில் பெற்றுள்ளது வெங்கட்பிரபுவின் இப்படம்.

இரண்டாமிடத்தில் தனம், அலிபாபா. நாகடத்தனமான உருவாக்கத்தால் தனத்தின் பார்வையாளர் எண்ணிக்கை வரும் நாட்களில் கணிசமாகக் குறையலாம். அதேநேரம், ஜாலியான அலிபாபா வசூலில் பிக்அப் ஆக பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

எதிர்பார்ப்பை எந்த வகையிலும் தூண்டாத கி.மு. கடைசி இடத்தில். வடிவேலுவின் காமெடி கைகொடுத்தால் மட்டுமே பிழைக்க வாய்ப்பு.

நான்கு படங்களில் திருப்திகரமான ரிசல்டை சரோஜா மட்டுமே பெற்றிருக்கிறது. கவலைப்பட வேண்டிய விஷயம் இது.

வெப்துனியாவைப் படிக்கவும்