வெற்றியே நடிகர்களின் அடிமனதை அளக்க சிறந்த அளவுகோல். நேற்று வரை கொடுத்ததை வாங்கிய பாவனாவிடம் மாற்றம். ஜெயம் கொண்டானின் வெற்றியே இந்த மாற்றத்திற்கு காரணம்.
தமிழில் பாவனா நடித்த படங்கள் எதுவும் சொல்லும்படி வெற்றிபெறவில்லை. அதிகம் எதிர்பார்த்த தீபாவளியும் கை கொடுக்கவில்லை. தெலுங்கில் இவர் நடித்த படங்கள் முதலுக்கு மோசமில்லாமல் ஓட, தெலுங்கில் கவனம் செலுத்தினார்.
இந்நிலையில் தமிழில் வெளிவந்தது ஜெயம் கொண்டான். பாவனாவுக்கு இதில் மின்மினி ரோல்தான். படம் வெற்றி பெற்றதால் இந்த மின்மினி மினிமம் முப்பது என்று மூன்று விரல் காட்டுகிறார். அதாவது, படத்துக்கு முப்பது லட்சம்!
வெற்றிபெறும் படத்தில் நடித்தால் நம்மவர்கள் முப்பது தருவார்கள், ஒரு கோடியும் தருவார்கள்.