மர்மங்களின் தொகுப்பாக இருக்கிறார் மீரா ஜாஸ்மின். தமிழ் சினிமாவில் சிறிது காலம் தலைமறைவாக இருந்தவர் திரும்பி வந்திருப்பது ஒரு புதுமுகத்துடன் நடிக்க.
முன்னணி ஹீரோக்களுக்கு முதுகு காட்டும் இவர், புதுமுகத்துடன் நடிக்க எப்படி ஒத்துக்கொண்டார்? காரணம் மீராவின் நலம் விரும்பிகளுக்கே தெரியவில்லை.
வெற்றிவேந்தன் இயக்கும் ஆதிநாராயணன் படத்தில் மீரா ஜாஸ்மின் நாயகி. நாயகன் புதுமுகம் கஜன். ஆதிநாராயணனின் படப்பிடிப்பு தற்போது புதுவையில் நடந்து வருகிறது. மீரா ஜாஸ்மின் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து வருகிறார் இயக்குனர் வெற்றி வேந்தன்.
ஆதிநாராயணனுக்கு இசை ஸ்ரீகாந்த் தேவா. பாக்ஸ் ஆஃபிஸ் புரொடக்சன்ஸ் பாலாஜி படத்தை தயாரிக்கிறார்.