ரசிகர்களை சந்திக்கும் சேரன்!

ரசிகர்களை நேரடியாக சந்தித்து உரையாட தீர்மானித்துள்ளது, ராமன் தேடிய சீதை யூனிட்.

மோசர் பேர் தயாரித்திருக்கும் ராமன் தேடிய சீதை இம்மாதம் வெளியாகிறது. வித்யாசாகர் இசையமைத்துள்ளார். புதிய கீதை, கோடம்பாக்கம் படங்களின் இயக்குனர் ஜெகன்நாத் இயக்கம்.

தனக்கேற்ற ஜோடியை சேரன் தேடுவது கதை. தேடலின் நடுவில் விமலா ராமன். ரம்யா நம்பீஸன், கார்த்திகா, கஜாலா, நவ்யா நாயர் ஆகியோர் வந்து போகிறார்கள். கண் தெரியாத பசுபதியும், நிதின் சத்யாவும் சர்ப்ரைஸ் கேரக்டரில் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு நாகர்கோவிலிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நடந்தது. படம் வெளியான பிறகு நாகர்கோவில் செல்லும் ராமன் தேடிய சீதை யூனிட், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்ப்பதுடன், அவர்களுடன் படம் குறித்து விவாதிக்கவும் செய்கிறது.

இயக்குனர் ஜெகன்நாத் சேரனின் உதவியாளராக பணிபுரிந்தவர். தனது சொந்தப் படம் அளவுக்கு ராமன் தேடிய சீதையில் ஆர்வம் காட்டி வருகிறார் சேரன். அவரது சிந்தையில் தோன்றியதுதான் இந்த சந்திப்பும், உரையாடலும்.

படத்தை எப்படியும் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்னறு வேலை செய்கிறார்கள். விடாமுயற்சிக்கு வெற்றி நிச்சயம் என்பது உலக நியதி.

வெப்துனியாவைப் படிக்கவும்