திருட்டு வி.சி.டி.க்கு எதிராக தாம்தூம்!

புதன், 27 ஆகஸ்ட் 2008 (19:38 IST)
வரும் வெள்ளிக்கிழமை தாம்தூம் ரிலீஸ். குண்டர் சட்டம் கொண்டு வந்தும் சினிமாக்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறது திருட்டு வி.சி.டி. போலீஸை மட்டும் நம்பினால் போதாது என்று தாம்தூம் டீமே திருட்டு வி.சி.டி.க்கு எதிரான போரில் குதித்துள்ளது.

படத்தின் நாயகன் ஜெயம் ரவி, தயாரிப்பாளர் மீடியா ஒன் சூரியராஜ் குமார் ஆகியோர் இந்தப் போராட்டத்தில், தமிழ்த் திரைப்பட பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் கே. ராஜனை துணைக்கு அழைத்துள்ளனர்.

இவர்கள் மூவரும் நிருபர்களை சந்தித்து தங்களது திட்டத்தை விளக்கினர்.

தாம்தூம் திருட்டு வி.சி.டி. விற்கப்படுகிறதா என்பதை இவர்கள் அமைக்கும் டீம் 24 மணி நேரமும் கண்காணிக்கும். அப்படி விற்கப்படுவது குறித்து யார் வேண்டுமானாலும் தகவல் சொல்லலாம். இதற்காக பத்து பிரத்யேக லைன்கள் அமைக்கப்படும்.

கேபிளில் தாம்தூம் படத்தை பார்ப்பது, வீடுகளில் திருட்டு வி.சி.டி.யில் பார்ப்பது ஆகியவற்றை ஜெயம் ரவியின் ரசிகர் மன்றத்தினர் கண்காணிப்பர்.

தாம்தூம் சிறப்பாக வந்திருக்கிறது. அதன் பலன் குறுக்கு வழியில் சிதறக் கூடாது என்பதற்கே இந்த முன்னேற்பாடுகள்.

வெப்துனியாவைப் படிக்கவும்