சரம் தொடுப்பது போல்தான் படங்களை கவனித்து தேர்ந்தெடுக்கிறார் மீரா ஜாஸ்மின். கதை பிடிக்கவில்லை என்றால் இவரிடம் கால்ஷீட் வரம் பெறுவது கஷ்டமோ கஷ்டம்!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் கதை கேட்டு இரண்டு படங்களுக்கு இஷ்டப்பட்டு கால்ஷீட் தந்திருக்கிறார் மீரா ஜாஸ்மின். அதில் ஒன்று இயக்குனர் ஷங்கரின் எஸ். பிக்சர்ஸ் தயாரிக்கும், அனந்தபுரத்து வீடு.
திகிலும், இருளுமாக தொலைக்காட்சி நேயர்களை மிரட்டிக் கொண்டிருந்த விடாது கருப்பு நாகாதான் அனந்தபுரத்து வீடு படத்தின் இயக்குனர். இதில் மீரா நாயகி. நாயகன் நந்தா.
எஸ் பிக்சர்ஸ் தயாரித்த எந்தப் படத்திற்கும் இதுவரை பாடல் எழுதாத வைரமுத்து, அனைத்துக்கும் சேர்த்து வைத்து இதில் எல்லா பாடல்களையும் எழுதுகிறார்.
படத்தில் திகிலுடன் கொஞ்சம் தமிழையும் எதிர்பார்க்கலாம்!