குசேலன் படம் வெளியாகியும் அதன் பிரச்சனை ஓய்ந்த பாடில்லை. படம் தொடங்கப்பட்டவுடன் 'நான் பதினைந்து சதவிகிதம்தான் வருவேன். அதனால் இது என் படம் இல்லை, பசுபதியின் படம் என்று பேட்டி கொடுத்து இயக்குனர் வாசுவுக்கு ஷாக் கொடுத்தார் ரஜினி. அதற்குப்பின் யார் யாரோ ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக பேச்சு அடிபட்டு அடங்கியது.
அதற்குப்பின் ஒகேனக்கல் பிரச்சனையால் கர்நாடகத்தில் குசேலனை ஓடவிடமாட்டோம் என்று கன்னட அமைப்பினர் போர்க்கொடி தூக்க, அதற்கு அவர் மன்னிப்பு கேட்க, தமிழக ரசிகர்கள் சிலர் கொந்தளித்து ரஜினி பேனர்களைக் கிழத்தார்கள்.
அதுமட்டுமா... தற்போது குசேலனால் பல கோடி நஷ்டம், அதற்கு பாதி பணம் திருப்பித் தரவேண்டும் என்று சில விநியோகஸ்தர்கள் ஒன்று கூடி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி இந்தப் பிரச்சனைகள் எல்லாம் போதாதென்று நடிகை மீனாவும் வாசுவோடு பிரச்சனை பண்ணிக்கொண்டு இருக்கிறார்.
நான் எப்போதைய நடிகை, எவ்வளவு பேருக்கு சீனியர். என் பெயரை டைட்டிலில் இரண்டாவதாக (நயன்தாராவுக்கு அடுத்து) போட்டது மட்டுமல்லாமல் போஸ்டரில் கூட என் முகத்தை போடுவதில்லை என்று ஏகத்துக்கு திட்டிக் கொண்டிருக்கிறார் கண்ணழகி.