சீமானின் தமிழ் சேவை!

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (20:11 IST)
'நான் முழுநேர நடிகன் கிடையாது' என்பதில் உறுதியோடு இருக்கிறார் இயக்குனர் சீமான். மிகவும் தெரிந்த இயக்குனர்கள் மிகவும் விரும்பி அழைத்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறார்.

அதன்படி தங்கர்பச்சானின் 'பள்ளிக்கூடம்', எவனோ ஒருவன் படத்தில் மாதவனோடு போலீஸ் அதிகாரியாக நடித்தார். அதன்பின் சுப்ரமணிய சிவா கேட்டுக் கொண்டதற்கிணங்க 'பொறி' படத்தில் பிளாட் உரிமையாளராக நடித்தார்.

தற்போது 'மாஸ்கோவின் காவேரி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 'நான் சினிமாவுக்கு இயக்குனராகத்தான் ஆசைப்பட்டு வந்தேன். அதுதான் என் முழுநேர வேலை. அத்தோடு தற்போது தமிழ் வளர்ச்சிக்கான மேடைகள் ஏறி வருகிறேன். அப்படி பல மாவட்ட கூட்டங்களுக்கு சென்று வருகிறேன் என்‌கிறா‌ர்.

'அழைப்பிதழ்' படத்திற்கு அடுத்து மற்றொரு படத்தை இயக்கும் பணியில் இறங்கியிருக்கிறார். மிகவும் பெரிய நடிகருடனும், பிரபலமான பட நிறுவனத்தோடும் பேசி வருகிறார். அந்தப் படமும் 'அழைப்பிதழ்' போல வசனங்கள் தூய தமிழில் இருக்குமா என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்