மீண்டும் ஒரு யுவன்!

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (20:08 IST)
தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல்வேறு மொழியில் உள்ள ஹீரோக்கள் கூட தமிழில் படம் நடிக்க வேண்டும் என்று ஆவலாக இருப்பார்கள்.

அந்த வகையில் தற்போது மற்ற மாநிலத்தவர்களின் வரவு தமிழில் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. காரணம் தமிழ் ரசிகர்கள்தான். எந்த மாநிலத்தவர் என்றெல்லாம் பார்ப்பது கிடையாது. படம் நன்றாக இருந்தால் போதும் விசிலடித்து விடுவார்கள்.

அப்படி தெலுங்கிலிருந்து தமிழுக்கு வருகிறார் யுவன். தெலுங்கில் பிரபலமான இயக்குனர் 'அம்மா' ராஜசேகர். இவர் இயக்கிய பல படங்கள் செம ஹிட். அவரின் சொந்த தம்பிதான் யுவன். இவரே ஹீரோவாக நடித்து இயக்கவும் செய்கிறார்.

படத்திற்குப் பெயர் 'சிந்தனை செய்' என்று வைத்திருக்கிறார்கள். இதே படத்தை தெலுங்கில் 'அம்மா' ராஜசேகர் இயக்குகிறார்.

முதுமுக வரவான இந்த நடிகர் யுவனுக்கு ஜோடியாக 'அன்புள்ள காதலுக்கு', தவம் போன்ற படங்களில் நடித்த மதுசர்மா நடிக்கிறார். மேலும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்