புரியாத வரிகள் எனது ஸ்டைல்!

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (20:03 IST)
இயக்குனரும், நடிகர் விஜயின் அப்பாவுமான எஸ்.ஏ. சந்திரசேகர் இன்றைய யூத் இயக்குனர்களோடு போட்டி போட்டுக் கொண்டு இயக்கிவரும் படம் பந்தயம். சென்னை-28 படத்தில் நடித்த நிதின் சத்யா ஹீரோ. மற்றும் பிரகாஷ்ராஜ் முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

வழக்கமாக சந்திரசேகரின் படத்தில் விஜய் ஒரு சின்ன கேரக்டரிலாவது நடிப்பார். ஆனால், இந்தப் படத்தில் நடிக்கவில்லை. காரணம் அடுத்து விஜயை வைத்து ஒரு ஆக்சன் படத்தை இயக்கவிருக்கிறார் எஸ்.ஏ.சி.

பந்தயத்திற்கு விஜய் ஆண்டனிதான் இசை. இவர் ஏற்கனவே எஸ்.ஏ.சி.யின் படம் ஒன்றுக்கு இசையமைத்துள்ளார். பாடல்களில் ஏதேனும் வித்தியாசமான வரிகளை பல்லவியாக வைத்து இசையமைப்பது இவரது பாணி. டிஷ்யூம் படத்தில் டைலமோ, காதலில் விழுந்தேன் படத்தில் நாக்க முக்க.

அதுபோல் இந்தப் படத்திலும் ஒரு பாடலுக்கு முயற்சி செய்திருக்கிறார். அத்தோடு சுராங்கனி பாடல்களைப் பாடும் சிலோன் மனோகரின் இரண்டு படங்களை இந்தப் படத்தில் வித்தியாசமான இசை சேர்ப்புடன் கலக்கியிருக்கிறார் விஜய் ஆண்டனி.

அதுமட்டுமில்லாமல் தனது ஒவ்வொரு படங்களிலும் ஒரு புதுப் பாடகர்களையாவது பாடவைப்பார், அதுபோல் இந்தப் படத்திலும் சிலரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்