உஸ்பெகிஸ்தான் லொக்கேஷன்!

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (19:49 IST)
'ஜெயம் கொண்டான்' வெளியீட்டுக்குத் தயாராய் இருக்கும் படம். பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்த சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க, ஆர். கண்ணன் இயக்கியுள்ளார்.

இளசுகளுக்கு பிடித்த படமாக இருப்பதோடு மட்டும் இல்லாமல், மனிதனாக பிறந்த ஒவ்வொருவரம் எதற்கும் தயங்காமலும், நிதானமாக அடியெடுத்து வைத்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதை விளக்கும் படமாகவும் இருக்கிறது.

உன்னாலே உன்னாலே படத்தில் நடித்த வினய் நாயகனாகவும், பாவனா நாயகியாக நடிக்கிறார். லண்டனில் இருந்து இந்தியா வரும் பையனுக்கும், மதுரையின் மண் மனம் மாறாத பெண்ணுக்கும் ஏற்படும் காதலையும் அழகாக படம்பிடித்திருக்கிறார்கள். அதுவும் உஸ்பெகிஸ்தான் நாட்டில் இதுவரை படப்பிடிப்பு நடித்தாத இடங்களில் பாடல் காட்சி எடுத்திருக்கின்றனர்.

அத்தோடு 'யாரடி நீ மோகினி' படத்தில் 'பாலக்காடு பக்கத்திலே' பாடலுக்கு தனுசுடன் ஆட்டம் போட்டு கலக்கிய சரண்யா மோகனும் நடிக்கிறார். பாடல்கள் வெற்றிபெற்ற சந்தோஷத்தில் இருக்கும் இயக்குனருக்கு படமும் வெற்றி பெறட்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்