வழக்கில் மாட்டிய டைட்டில்!

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (19:47 IST)
பொய் சொல்ல போறோம் என்ற படத்தை போர் பிரேம் பிக்சர்ஸ் தயாரித்து படமும் வெளியாக இருக்கும் நிலையில், டைட்டில் சண்டை நடந்து கொண்டு இருக்கிறது.

இதே தலைப்பில் சென்னையைச் சேர்ந்த ஷண்முகப்பிரியன் என்பவர், தான் ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தில் இப்பெயரை பதிவு செய்துள்ளேன். பதிவு செய்ததன் ஆதாரமாக தயாரிப்பு சங்க மாத இதழிலும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் என் டைட்டிலை இவர்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

இப்படத்தின் ட்ரெய்லர் காட்சிகளும் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இப்படி ஒரு வழக்கு போடப்பட்டிருப்பது குறித்து மிகுந்த கவலையில் இருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் விஜய்.

இவர் ஏற்கனவே அஜித் நடித்த 'ஆழ்வார்' படத்தை இயக்கியவர். இது சம்பந்தமாக ஷண்முகப்பிரினிடம் சமாதானம் செய்ய தயாரிப்பாளர் சங்கத்தை நாடி இருக்கிறார் தயாரிப்பாளர்.

படம் ஆரம்பிக்கும் போது விட்டுவிட்டு இப்படி வெளியாகும் நேரத்தில் பிரச்சனை பண்ணினால் டைட்டிலுக்கான தொகை கூடுமென்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்