சாமியை வேண்டும் சரத்குமார்!

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (19:44 IST)
நடிகர் சரத்குமார் படங்கள் சமீபத்தில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதனால் அவர் தற்போது மிகவும் நம்பிக்கையோடு இருக்கும் படம் '1977'. இரண்டு வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இரண்டு வேடங்கள் என்றாலும் படத்தில் ஆறு விதமான கெட்டப்புகளில் அசத்தவுள்ளார். ஒரு சரத்துக்கு நமீதாவும், இன்னொரு சரத்துக்கு பர்சனாவும் ஜோடி சேர இருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப் புறங்களில் நடந்து வருகிறது.

சமீபத்தில் சரத்-நமீதா இருவரும் பறக்கும் ரயிலில் இருந்து பஸ்சில் தாவும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி எடுக்கப்பட்டது.

இதையடுத்து கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் 'ஜக்குபாய்' படத்திலும் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இக்கதை ரஜினிக்காக பண்ணப்பட்டது. ஆனால் ரஜினி நடிக்க மறுத்ததால்... சின்னச் சின்ன மாற்றங்களோடு சரத் நடிக்கிறார்.

'ஜக்குபாய்' படத்துக்கு முன்னாள் '1977' படம் ரிலீஸ் ஆகி வெற்றிபெற்றால்... 'ஜக்குபாய்' வியாபார ரீதியில் வெற்றிபெறும் என்பது சரத்தின் நம்பிக்கை. அதை காப்பாற்றுவாரா... என்பது 1977 பட இயக்குனர் தினேஷ்குமார் கையில்தான் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்