எதற்கெடுத்தாலும் சென்டிமெண்ட், வாஸ்து, நல்ல நேரம், கெட்ட நேரம் என்று ஒவ்வொரு விஷயத்துக்கும் பார்க்கும் ஒரு நடிகர் உண்டென்றால் அது ஸ்ரீகாந்த் மட்டும்தான்.
ஒரு ஆஸ்தான ஜோதிடரை வைத்துக்கொண்டு அவர் சொல்படி கதை கேட்பது, படங்களில் ஒப்பந்தம் ஆவது எல்லாமே. அதன்படிதான் தான் நீண்டகாலம் வசித்து வந்த நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது சொந்த வீட்டை காலி செய்துவிட்டு தன் அலுவலகமாக மாற்றினார்.
அதேபோல குமரன் காலனியில் உள்ள வீட்டில் இருக்கும்போதுதான் காதல் ஏற்பட்டு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து, போலீஸ் கேஸ் என்று அலைந்ததும். அதற்குப் பின்னால் ஏதோ ஏற்பட்ட கிரக நிலை மாற்றத்தால் தன் காதலியையே கரம்பிடித்தார்.
இப்போது நன்றாக இருந்தாலும், மனம் ஏதோ குழப்பத்திலேயே இருந்து வருவதாக நினைத்தவர், தற்போது அந்த வீட்டை விட்டும் வெளியேறி தன் மனைவியோடு தனிக்குடித்தனம் நடத்த திட்டமிட்டு, வீடு பார்த்து குடியேறிவிட்டார்.
அப்பா, அம்மா மீது மிகவும் பாசம் கொண்ட ஸ்ரீகாந்த், அவர்களை விட்டு பிரிந்து போவது சங்கடமாக இருந்தாலும், கிரக சூழ்நிலை ஒத்துவரவில்லை என்று நினைப்பதோடு, வாடகை வீட்டிற்கு சென்ற பிறகாவது படங்கள் குவியும் என்ற யூகம்தான்.
என்னதான் கிரகமென்றாலும் நடப்பதுதான் நடக்கும். கிடைப்பதுதான் கிடைக்கும் என்று ஸ்ரீகாந்துக்கு யார் சொல்லி புரியவைக்கப் போகிறார்கள்.