யாரிடமும் சொல்லாமல் சட்டென தாலி கட்டிக்கொண்டவர் பாரதி. 'அம்முவாகிய நான்' படத்தில் விபச்சாரப் பெண்ணாக நடித்தவர். கொஞ்ச நாட்களாக ஆளைக் காணலையே என்று கேட்பவர்களிடமெல்லாம் தெலுங்கு, மலையாளம், கன்னத்தில் பிஸி என்று கதைகட்டிக் கொண்டிருந்தார்.
காரணம் தன் கல்யாணத்தை மறைக்கத்தான். அதுமட்டுமில்லாமல் திருமணம் நடந்த விஷயம் வெளியில் தெரிந்தால் கிடைக்கிற ஒன்றிரண்டு வாய்ப்பும் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காகத்தான்.
என்றாலும் ஜோதிர்மயி போன்ற நடிகைகள் திருமணத்திற்குப் பின்னும் ஹீரோயின்களாக நடிக்கையில் நாம் மட்டும் ஏன் நடிக்கக் கூடாது என்ற முடிவுடன் தீவிரமாக மீண்டும் நடிக்க திட்டமிட்டுள்ளார்.
இப்படி அவசரப்படாமல் சில படங்களில் நடித்துவிட்டு கொஞ்ச காலத்திற்குப் பிறகு திருமணம் செய்திருக்கலாமே என்று கேட்டால்... வெட்கத்துடன் அவர்தான் அவசரப்பட்டுட்டார் என்று தன் முன்னாள் காதலரான, இன்றைய கணவனை கைநீட்டுகிறார் பாரதி.
சினிமாவில் எல்லாம் காற்றுள்ளபோதே தூத்திக்கணும். இல்லேன்னா... காத்துக்காக இப்படி காத்துக்கிட்டுதான் இருக்கனும்.