எண்பதுகளில் வெளிவந்த சிலோன் மனோகரின் பாடல்களுக்கு எஸ்.ஏ. சந்திரசேகரன் பெரிய ரசிகர் போல. பந்தயம் படத்தில் ஒன்றுக்கு இரண்டு பாடல்களை ரீ-மிக்ஸ் செய்துள்ளார்.
சின்ன மாமியே பாடலின் ரீ-மிக்ஸில் நடிகை ராணியை ஆட வைத்துள்ளார். இன்னொரு பாடலான சுராங்கனியில் ஆடுவது மேக்னா நாயுடு.
இந்த இரு பாடல்களுக்காக சிலோன் மனோகரை தேடிப்பிடித்து அனுமதி வாங்கியிருக்கிறார் எஸ்.ஏ.சி. மனோகரின் குரல் வளம் வயது காரணமாக பிசிறடிக்க, அதேபோன்ற குரல் உடைய பாலாஜி என்பவரை பாட வைத்துள்ளார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. பாலாஜி பாடும் முதல் திரைப்பாடல் இதுதானாம்.
பாடலுக்கு இத்தனை சிரத்தை எடுப்பவர்கள் தங்கள் சின்சியாரிட்டியை கதையிலும் காட்டியிருப்பார்கள் என்று நம்புவோம்?