சினேகாவின் சினேகிதன்!

திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (16:49 IST)
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடிக்க அமெரிக்கா சென்றதில் பிரசன்னாவுக்கும் சினேகாவுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க்-அவுட் ஆகியுள்ளது. எந்தளவுக்கு என்றால், ஜோடி கிடைக்காமல் இருந்த பிரசன்னாவின் புதிய படத்திற்கு தானே முன்வந்து கால்ஷீட் கொடுத்துள்ளார் சினேகா.

ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை படத்தை தேக. செல்வபாரதி இயக்கத்தில் ரீ-மேக் செய்கிறார் மனோபாலா. இதில் ரவிச்சந்திரன் வேடத்தில் பிரசன்னாவும், முத்துராமன் வேடத்தில் பசுபதியும், நாகேஷ் கேரக்டரில் வடிவேலுவும், பாலையா வேடத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் நடிக்கின்றனர். இசை யுவன் ஷங்கர் ராஜா.

பிரசன்னாவுக்கு யாரை ஜோடியாக நடிக்க வைப்பது என்ற யோசனையில் இருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! சினேகாவே முன்வந்து கால்ஷீட் கொடுத்துள்ளார். சில்மிஷம் இல்லாத பிரசன்னாவின் நட்புக்கு சினேகா கொடுத்த மரியாதை இது என்கிறார்கள்.

நட்புக்கு மரியாதை காதலுக்கு மரியாதையாக பரிமாணம் கொள்ளுமா?

வெப்துனியாவைப் படிக்கவும்