‌மீண‌டு‌ம் ஏ.வெ‌ங்கடே‌ஷ் இய‌க்க‌த்‌‌தி‌ல் சர‌த்குமா‌‌ர்!

வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (19:20 IST)
மகா‌பிரபு, ஏ‌ய், சாண‌க்‌கியா பட‌ங்களை சர‌த்குமாரை வை‌த்து இய‌க்‌கிய ஏ. வெ‌ங்கடே‌ஷ் ‌‌மீ‌ண்டு‌ம் சர‌த்தை இ‌ய‌க்கு‌கிறா‌ர். ச‌ர‌த்‌தி‌ன் 'ஜ‌க்குபா‌ய்' முடி‌ந்த ‌பிறகு பு‌திய பட‌ம் தொட‌ங்க‌ப்படு‌கிறது.

ஏ. வெ‌ங்கடே‌ஷ் த‌ற்போது துரை பட‌த்தை இய‌க்‌கி வரு‌‌கிறா‌ர். பட‌ம் ‌‌கி‌ட்ட‌த்த‌ட்ட முடி‌ந்து ‌வி‌ட்டது. பா‌தி‌யி‌ல் ‌‌நி‌ன்றுபோன ‌கி‌ல்லாடியையு‌ம் நேர‌ம் ஒது‌க்‌கி எடு‌த்து வரு‌கிறா‌ர். வரு‌ம் இருபதா‌ம் தே‌தி‌யி‌லிரு‌ந்து இவரது இய‌க்க‌த்‌தி‌ல் சு‌ந்த‌ர் ‌‌சி. நடி‌க்கு‌ம் 'வாடா' தொட‌ங்கு‌கிறது.

இ‌ந்த மூ‌ன்று பட‌ங்களு‌க்கு‌ப் ‌பிறகு சர‌த்குமா‌ர் பட‌ம். 'சூ‌ப்ப‌ர்டா', 'கல‌க்குற ச‌ந்துரு' பட‌ங்களை தயா‌ரி‌த்த அ‌ஷ்டல‌ட்சு‌மி ‌பி‌லி‌ம்‌ஸ் தயா‌ரி‌ப்பு. வசன‌‌ம் ப‌ட்டு‌க்கோ‌ட்டை ‌பிரபாக‌ர்.

கதை ‌விவாத‌ம் ஏ‌ற்கனவே தொட‌ங்‌கி நட‌ந்து வரு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்