தன்னிகரற்றவன்! அயன் பெயரின் விளக்கம் இது. திருவல்லிக்கேணியில் தொடங்கிய அயன் படப்பிடிப்பு வெளிநாடு சென்று மீண்டும் சென்னைக்கே திரும்பியுள்ளது.
பர்மா பஜார் பின்னணியில் தயாராகும் படமாம் இது. பெரும்பாலான காட்சிகளை வட சென்னை பகுதிகளில் எடுத்து வருகிறார் கே.வி. ஆனந்த்.
தண்டையார் பேட்டை, எண்ணூர் பகுதிகளில் சூர்யா, கருணாஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. ஏவி.எம். ஸ்டுடியோவிலும் சில காட்சிகளை எடுக்க உள்ளனர்.
அயனில் இந்தி வில்லன் நடிகர் ஒருவரும் நடிக்கிறார். தமிழ் என்றால் கேஜி எவ்வளவு என கேட்கும் இவருக்கு படத்தின் கதை வசனகர்த்தாவான பாலகிருஷ்ணன் (சுபா) வசன உச்சரிப்பு சொல்லிக் கொடுக்கிறார்.
பாடல் காட்சிக்கு வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளனர்.