காத்திருக்கும் வாரிசுகள்!

வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (19:03 IST)
வாரிசுகளின் தேசமாகி வருகிறது கோடம்பாக்கம். இருக்கிற வாரிசுகள் போதாது என இன்னும் இரண்டு வாரிசுகள் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.

ஒருவர் கார்த்திக்கின் மகன் கெளதம். ராதா மகளுடன் கொதம் நடிக்கிறார் என்ற காஸிப்பை மறுத்த கார்த்திக். பள்ளிப் படிப்பையே கெளதம் முடிக்கவில்லை. பிறகு பார்க்கலாம் நடிப்பதை என்றார். இப்போது மீசை கறுக்க தொடங்கிவிட்டது கெளதமுக்கு. நல்ல வாய்ப்பாக வந்தால் மகனுக்கு பச்சைக்கொடி காட்ட கார்த்திக்கும் தயார்.

இன்னொருவர் முரளியின் மகன் விஜய். வேதா தயாரிப்பாளர் பாஸ்கர் தயாரித்து இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளாராம். வேறு சில வாய்ப்புகளும் விஜயை தேடி வந்தாலும் எதுவும் இன்னும் முடிவாகவில்லை. ஏற்கனவே தமிழ் சினிமாவில் விஜய் இருப்பதால், வேறு நல்ல பெயராக தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

கெளதமுக்கு முன்னால் விஜய் மேக்கப் போட்டுவிடுவார் என்பதே இண்டஸ்ட்ரி பேச்சு.

வெப்துனியாவைப் படிக்கவும்