கந்தா யூனிட் சென்னை திரும்பியது!

செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (18:17 IST)
தஞ்சாவூரில் முதல் ஷெல்யூலை முடித்து சென்னை திரும்பியிருக்கிறது கந்தா யூனிட். அறிமுக இயக்குனர் பாபு கே. விசுவநாத் இயக்கத்தில் கரண் நடிக்கும் இப்படம் தஞ்சாவூர் மண்ணின் மைந்தர்களை பற்றியது. மித்ரா என்ற மலையாள நடிகை கந்தாவின் நாயகி.

இரண்டாவது ஷெல்யூல் சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் இம்மாத இறுதியில் தொடங்குகிறது. ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க இருக்கிறார் இயக்குனர்.

படத்தில் சண்டைக் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சுவாரஸ்யமான விஷயம், கதாநாயகன் கரண் நிஜமாகவே ஒரு கராத்தே வீரராம். கந்தாவில் கற்றவித்தை அனைத்தையும் காட்டியுள்ளாராம்.

ஏ.கே. பிலிம் கார்டன் கந்தாவை தயாரிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்